மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்

Wednesday, December 22, 2010 by suresh , under ,

அனைவருக்கும் வணக்கம்.
மலேசியத் தமிழ் வலைபதிவாளர்களின் கலந்துரையாடல் கடந்த ஞாயிறன்று இனிதே நடந்தேறியது. அந்த கலந்துரையாடலின் சில புகைப்படங்கள் இதோ...








இந்த கலந்துரையாடலில் எனது பங்களிப்ப்பு குறைவாகவே இருந்தாலும்  இங்கு நடந்தவற்றை மிகவும் அமைதியாக அமர்ந்து செவிமடுதுக்கொண்டிருந்தேன். அவற்றில் சில...

முதலில் தமிழ் வலைபதிவாளர்களின் வருகை. இந்த கூற்று மிகவும் வருத்ததிர்கூரியது. காரணம் இங்கு வருகை தந்த வலைபதிவாளர்கள் நூறில் ஒருபங்கு கூடி அல்ல... இதற்கு முன்பு நான் மற்ற இனத்தவர்களின் வலைபதிவாளர் கலந்துரையாடலுக்கு சென்டிருக்கிறேன், அங்கெல்லாம் நூற்றுக்கணக்கானவர்களை காணலாம் ஆனால் இங்கு விரல்விட்டு எண்ணக்கூடியேவர்களே இருந்தனர். அதிலும் இளைஞர்கள் ஒரு சிலர். இது இளைஞர்களின் பங்களிப்பை மிகவும் மோசமாக சுட்டிக்காட்டுகிறது. எங்கே மற்ற தமிழர்கள் ???? 

அடுத்து இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் காலதமதின்மை.. வெளியில் நடக்கும் விருந்து போன்ற காரியங்களுக்குதான் காலதாமதம் என்றால் தமிழோடு நடக்கும் இந்த கலந்துரையாடலுக்கும் அதே காரணம். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை மாறாக பொதுவாக சொல்கிறேன். தயவு செய்து அடுத்தே தடவை இவைகளை திருத்திக்கொள்ளுங்கள். எப்பொழுது நாம் இந்த பழக்கத்தை மாற்றுகின்றமோ அன்றுதான் தமிழர் சமுகமாகிய நாம் மேன்மை நிலைக்கு வர முடியும்.

மற்றபடி இந்த கலந்துரையாடலில் பேசியே கூற்றுகள் அனைத்தும் வரவேற்க கூடியவைதான். மேலும் இந்த கலந்துரையாடலில் கலந்துரையாடிய கருத்துக்களை வாசிக்க இங்கே சொடுக்கவும் :


பதிப்புரிமை : சுரேஷ் காளியண்ணன்

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்

Wednesday, December 15, 2010 by suresh , under ,



மலேசிய உத்தமம் அமைப்பின் ஏற்பாட்டில், தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 19-12-2010 (ஞாயிறு)
நேரம்: மாலை மணி 2:00 - 4:00
இடம்: தாமரை உணவகம், ஜாலான் காசிங் பெட்டாலிங் ஜெயாவில் (Lotus Restaurant, Jalan Gasing P.J)

உத்தமம் அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினரும், மலேசிய நிகராளியும் ஆகிய சி.ம.இளந்தமிழ் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிநடத்துவார்.

தமிழ் இணைய முன்னோடிகளில் ஒருவரான திரு.பாலா பிள்ளை (Tamilnet- Australia)அவர்கள் சிறப்பு வருகையளிக்கவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் பின்வருமாறு:


1.வலைப்பதிவர் அறிமுகம்
2.மலேசியத் தமிழ் வலைப்பதிவு வாழ்வும் வளர்ச்சியும்
3.மலேசியாவில் தமிழ் வலைபதிவர்களை அதிகரிப்பதற்கான வழிவகைகள்
4.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்
5.மலேசியத் தமிழ் வலைப்பதிவுலகச் சிக்கல்களும் தீர்வுகளும்
6.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு / பட்டறை


குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருப்பதால், இதனையே அழைப்பாக ஏற்று மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் வருகை தருமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்னதாக, இவ்வகையிலான சந்திப்பு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டுமொரு முறை ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்’ நடைபெற உள்ளது.

ஆகவே, இதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்.
வலைப்பதிவர் நண்பர்கள் தயவுசெய்து தங்கள் வருகையை உறுதிபடுத்தும் வகையில் அழைத்து தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி விடுக்கவும்.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்:
சி.ம.இளந்தமிழ் - உத்தமம் (012-3143910) சுப.நற்குணன் - திருத்தமிழ் (012-5130262) மின்னஞ்சல்: thirutamilblog@gmail.கம

பதிப்புரிமை : திருத்தமிழ் வலைத்தளம் 


மலேசியா திரைப்படங்கள் - ஒரு கண்ணோட்டம்

Monday, December 13, 2010 by suresh , under

வணக்கம் நண்பர்களே. இந்த வலைபகுதிக்கு உங்களின்  வற்றாத ஆதரவை நல்கமைக்கு மிக்க நன்றி.. சரி இப்பொழுது இன்றைய தலைப்புக்கு வரலாம்.

மலேசியா திரைப்படங்கள் ஒரு சிறிய கண்ணோட்டம்.


ஆண்டுகணக்கில் தமிழக சினிமாவை ரசித்து கொண்டிருக்கும் நாம், அண்மைய கலாமாக மலேசியாவில் திரையிடப்படும் திரைப்படங்களையும் ரசிக்கும் அளவிற்கு நம் நாட்டின் சினிமா துறை நல்ல தரமான படங்களை வெளியீடு செய்கின்றன. தரம் இல்லாத படங்களை தயாரிக்கும் காலங்கள் கடந்து, நல்ல கதையம்சம், நல்ல வசனங்கள், படத்திற்கு உயிரூட்டும் அருமையான இசை மற்றும் தற்போது கொண்டிருக்கும் நவீன சாதனங்கள் இவையெல்லாம் ஒரு திரைபடத்தை வெற்றியடைய செய்கிறது. ஒரு படத்தின் முக்கிய பங்கான நடிகர்களின் நடிப்பு , இயக்குனரின் திறமை ஆகியவைதான் வெற்றியடையும் படங்களுக்கு பெருமை சேர்கின்றது. தமிழக திரைபடம் நமது நாட்டின் திரையரங்குகளில் நூறு நாட்களையும் தாண்டி ஓடியே அந்த நாளில், நம் மலேசியா நாட்டு திரைப்படம் ஒரு நாலாவது திரையரங்குகளில் ஓடாத என்று ஏங்கிய நாட்களெல்லாம் காற்றில் கலந்த மண்ணாகி போய்விட்டன.. தற்போதெல்லாம் நம் மலேசியா திரைப்படம் ஒரு மாதத்திற்கும் மேலாக  திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த கூற்றுதான் நம் நாட்டிலும் திறமையான நவீன கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு. 
இவ்வாறு நாட்டின் பெருமை சேர்க்கும் வகையில் திரைப்படங்கள் வெளிவந்தாலும், நாட்டின் பெயரிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தரமில்லாத பல திரைப்படங்கள் வெளியாகின்றன. ஒரு நல்லா கதையுள்ள படத்திற்கு தேவை நல்ல வசன வடிவமைப்பும் தான்.. இந்த அம்சமே இல்லாத வெளிவரும் படங்கள் படும்தோல்வி அடைவது மட்டும் அல்லாது மலேசியா திரைப்பட துறைக்கும் களங்கம் விளைவிக்கின்றன. மேலும் புரியாத வார்த்தைகள் மற்றும் நடிப்பு திறமையை வளர்க அல்லது உருவாக்க தெரியாதவைகளை கொண்டு ஒரு திரைபடத்தை உருவாக்குவதைவிட அதை உருவாக்காமல் இருப்பது மிகவும் நல்லது. ஆகையால் நம் நாட்டிலும் தரமான திரைப்படங்கள் வெளியீடு கண்டு வெற்றியடைவதற்கு இம்மாதிரியான தரமில்லாத திரைப்படங்கள் வெளிவராமல் இருப்பதே நல்லது. ஒரு படம் பார்பதற்கு சகிக்கவில்லை என்றல் அதை திருட்டு சீடியிலும் கூடி காண முடியாது. ஒரு நல்ல திரைப்படம் வெளியவதின் மூலம்தான் அந்த நாட்டின் சினிமா கலைத்துறையின் வளர்ச்சி மேன்மை அடையும். 


இன்றைய தலைப்பில் "மலேசியா திரைப்படங்கள் - ஒரு கண்ணோட்டம்" என்ற முறையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.  அடுத்த கலந்துரையாடலில் "மலேசியா இசைத்துறை - ஒரு கண்ணோட்டம்" என்ற முறையில் காணலாம். 


நன்றி. வணக்கம்.

பதிப்புரிமை : சுரேஷ் காளியண்ணன்


விருதகிரி - தமிழ்மலர் விமர்சனம்.

Saturday, December 11, 2010 by suresh , under


தனது அரசியல் பிரச்சாரத்தை இந்த சினிமா மூலம் தொடங்கிய நமது புரட்சிதலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணியில் தனது சினிமா அரசியலை மையமாக கொண்டு நடித்து உருவாக்கியிருக்கும் திரைப்படம்தான் "விருதகிரி".

தனது தேசிய திராவிட முன்நேற்றே கழக கட்சி கொடியை திரைப்படம் முழுவதும் பரக்கவிட்டிருக்கும் நமது புரட்சி தலைவர் தி.மு.கா கட்சியை மறைமுகமாகவும் மற்றும் நேரடியாகவும் தாக்கியிருப்பது மிக தெள்ள தெளிவாக தெரிகிறது. படத்தில் ஒரு பாடலை நவீன எம்.ஜி.ஆர் எனும் பாணியில் காட்டி இருப்பதை ஏற்று கொள்வது சற்று கடினமாகத்தான் உள்ளது... எது எப்படி இருந்தாலும் தாம் ஆட்சிக்கு வந்தால் என்னெவெல்லாம் செய்யப்படும் என்பதை தெளிவாககாட்டியுள்ளார் நமது புரட்சி தலைவர்... திரைப்பட ரசிகர்களுக்கு இல்லாமல் தமது அரசியல் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட படம்தான் "விருதகிரி" !

விமர்சனம் : சுரேஷ் காளியண்ணன்

விக்கீப்பிடியாவில் தமிழ்மலர்கள் வலைபகுதி !

by suresh , under

நம் தமிழ்மலர்கள் வலைத்தளம் தொடங்கிய முதல்நாள் அன்றே மலேசியா தமிழ்வலைபகுதி விக்கீப்பிடியாவின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இது நமக்கு நமதுவலைதளத்திற்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆதரவு.. பொதுமக்களிடையேநல்லாதரவு பெற்றுவரும் நம் வலைத்தளம் பிற்காலத்தில் ஒரு முன்னோடிவலைதளமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை எனலாம். அணைத்துபெருமைகளும் என் தமிழ் தாய்க்கு சமர்பிக்கிறேன்.

விக்கீப்பிடியாவில் நமது வலைதளத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

பேஸ்புக் - இணையதள நண்பனா ? வாழ்வின் எதிரியா ?

Friday, December 10, 2010 by suresh , under


பேஸ்புக் ! தற்பொழுதைய உலகத்தை நிர்ணயிக்கும் இணையதளமாக விளங்குகிறது இந்த பேஸ்புக் இணையதளம்.

ஒரு சிசு உருவாவது, பருவம் அடைவது, பள்ளிக்கு செல்வது, கல்லுரி செல்வது, உத்தியோகத்திற்கு செல்வது, காதலிப்பது, திருமணம் புரிவது முதல் இறக்கும் வரையில் நடக்கும் சம்பவங்களை இந்த இணையதளம் நிர்ணயிக்கிறது. சமுக முன்னேற்றம் முதல் சமுக சீர்கேடு வரை இந்த இணையத்தளம் கொண்டிருக்கிறது. இந்த தளத்தின் மூலம் ஒரு மனிதனை உயர்த்தவும் முடியும் தாழ்த்தவும் முடியும். கடத்தல் சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள், திருட்டு, ஏமாற்றம், போதைப்பொருள் போன்ற தீய சம்பவங்களும் இந்த இணையதளம் மூலகவும் நடந்தது, நடந்தும் கொண்டிருக்கிறது. தற்பொழுது ஒரு நாட்டின் வளர்ச்சியையும் கூட இந்த தளம் நிர்ணயிக்கும் சக்தியை பெற்றுள்ளது. ஆனால் இந்த முறை இப்படியே தொடர்ந்தால் காலபோக்கில் இந்த தளம்தான் ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தையும் நிர்ணயிக்கும் வல்லமையை பெற்றிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகது..

சமிப காலமாக பேஸ்புக்கின் மூலமாக காதல், பாலியல் போன்ற சம்பவங்கள் கட்டுகடங்காமல் இருக்கிறது..இந்த பிரச்சனைகள் என் தாய்மண்ணில் மட்டும் இன்றி உலகமெங்கும் தலைவிரிகோலமாக உள்ளது. இவற்றிற்கு ஆதாரங்களை நான் குடுக்க தேவை இல்லை, காரணம் அன்றாட பத்தரிக்கைகள், செய்திகள் வழியாக நிறைய செவிமடுக்கிறோம். இதுமற்றும் இன்றி பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களும் அதிக நேரத்தை இந்த தளத்திலே செலவிடுகின்றனர். மேலும் சிலர் இதன் மூலமாக பலவிதமான பிரச்சனைகள், வீண் வம்புகளை வளர்த்துகொள்கின்றனர்.

இப்படி தீய சீர்கேடுகளை வளர்த்து கொண்டிருக்கும் இந்த இணையதளம் உலகரீதியாகவும் தொழில்ரீதீயாகவும் அதீத நன்மைகளை குவித்துகொண்டிருக்கிறது. இவ்வளவு தீமைகளின் நடுவில் நன்மை மலர்வது அரிது. அந்த அரிதான செயலுடன் இயங்கும் தளமாக விளங்குகிறது இந்த பேஸ்புக் இணையத்தளம். உலக அரங்கில் விளமபர ரீதியாக முதன்மை வகிக்கிறது இந்த தளம். தற்போதெல்லாம் கைதொலைபேசி ண்களை கேட்கின்றமோ இல்லையோ பேஸ்புக்கின் இணையதள முகவரியைதான் கேட்கின்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

இவ்வாறு நன்மைகளையும் தீமைகளையும் குவிக்கின்ற இந்த பேஸ்புக் எனும் இணையதளம் நமக்கு நண்பனாக செயல்பட வேண்டுமா அல்லது நம்மை அழிக்கும் சக்தியாக செயல்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் கடமை நம்மிடம்தான் உள்ளது. நல்ல காரியங்களுக்கு மற்றும் அளவோடு உபயோகித்தால் இந்த தளம் நமக்கு நண்பன்...அளவுக்கு மீறினால் நஞ்சு என்பதை போலே, அளவு கடந்து போகும் பொழுது இந்த மே நம்மை அழிக்கும் சக்தியாக உருவெடுக்கிறது. ஆகவே தீர்மானம் நமது கையில்தான் உள்ளது...இனியாவது இந்த தளத்தின் மூலம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமுடன் இருக்க வேண்டும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


பேஸ்புக் இணையதள உரிமையாளர் Mark Zuckerberg

நன்றி
. வணக்கம்.


பதிப்புரிமை : சுரேஷ் காளியண்ணன்


த்ரி இடியட்ஸ்சிலிருந்து ஏன் விலகினேன்? -விஜய்யின் வெளிப்படையான விளக்கம்

by suresh , under



த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து தனது விளக்கத்தை அளித்திருக்கிறார் விஜய். ஆனால் அது அதிரடி அல்ல. வழ வழா!

நான் பெரிதும் மரியாதை வைத்திருக்கிற இயக்குனர் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சனைதானே தவிர வேறொன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார் விஜய். பேச்சோடு பேச்சாக அவர் சொன்ன விஷயம், நம்மை போல எக்ஸ்க்ளுசிவ் செய்திகளை வெளியிடும் அவசரக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

த்ரி இடியட்ஸ் படத்தில் நான் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளர்தான் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட வேண்டும். அப்படி அவர் ஏதும் செய்திகளை வெளியிடவில்லையே? ஒரு படத்தில் நடிக்கிற நடிகர் நடிகைகள் பற்றி இறுதியாக வெளியிடப்படும் செய்தி குறிப்புதான் முக்கியம். அப்படியில்லாமல் யூகத்தின் அடிப்படையில் பேசப்படும், எழுதப்படும் விஷயங்களை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்கிறார் விஜய்.

இம்மாதம் 17 ந் தேதி காவலன் யார் தடுத்தாலும் வெளிவரும் என்று சபதமிட்ட ஷக்தி சிதம்பரம் அந்த வேலைகளில் பிசியாக இருக்கிறார். இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது. (ஹ்ம்... மறுபடியும் ஒரு முந்திரிக்கொட்டை செய்தியா?)


பதிப்புரிமை : தமிழ்சினிமா

முதற்கண் முத்தமிழ் வணக்கம்

by suresh , under

ஆதிசிவன் பெற்றெடுத்து, அகத்தியனால் பாலூட்டி, போதித்த முத்தமிழாம்,புவியெங்கும் வாழியவே !

இணையதள
நண்பர்களே, சகோதரர்களே , வாசகர்களே .. உங்கள் அனைவரையும் இந்த வலைபகுதிக்கு வருக வருக என வரவேற்கிறேன்.

நான் சுரேஷ் காளியண்ணன், மலேசியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அடிப்படை தமிழ்பற்று கொண்ட தமிழன் . எனது தாயகத்தில் மட்டும் அல்லாது உலகெங்கும் இருக்கும் தமிழ்நெஞ்சங்களுக்கு இந்த வலைபகுதியை சமர்பிக்கின்றேன். இந்த தளம் முழுக்க முழுக்க தமிழை கொண்றிருக்க வேண்டும் என்பது என் அவா. ஆகவே அகில உலகில் இருக்கும் தமிழர்கள் இந்த தளத்திற்கு ஆதரவு தந்து இவ்வளைபகுதியை தொரடர்ந்து நடத்த முன்னோடியாக இருக்கேவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி வணக்கம் .

சுரேஷ் காளியண்ணன்