
பேஸ்புக் ! தற்பொழுதைய உலகத்தை நிர்ணயிக்கும் இணையதளமாக விளங்குகிறது இந்த பேஸ்புக் இணையதளம்.
ஒரு சிசு உருவாவது, பருவம் அடைவது, பள்ளிக்கு செல்வது, கல்லுரி செல்வது, உத்தியோகத்திற்கு செல்வது, காதலிப்பது, திருமணம் புரிவது முதல் இறக்கும் வரையில் நடக்கும் சம்பவங்களை இந்த இணையதளம் நிர்ணயிக்கிறது. சமுக முன்னேற்றம் முதல் சமுக சீர்கேடு வரை இந்த இணையத்தளம் கொண்டிருக்கிறது. இந்த தளத்தின் மூலம் ஒரு மனிதனை உயர்த்தவும் முடியும் தாழ்த்தவும் முடியும். கடத்தல் சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள், திருட்டு, ஏமாற்றம், போதைப்பொருள் போன்ற தீய சம்பவங்களும் இந்த இணையதளம் மூலகவும் நடந்தது, நடந்தும் கொண்டிருக்கிறது. தற்பொழுது ஒரு நாட்டின் வளர்ச்சியையும் கூட இந்த தளம் நிர்ணயிக்கும் சக்தியை பெற்றுள்ளது. ஆனால் இந்த முறை இப்படியே தொடர்ந்தால் காலபோக்கில் இந்த தளம்தான் ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தையும் நிர்ணயிக்கும் வல்லமையை பெற்றிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகது..
சமிப காலமாக பேஸ்புக்கின் மூலமாக காதல், பாலியல் போன்ற சம்பவங்கள் கட்டுகடங்காமல் இருக்கிறது..இந்த பிரச்சனைகள் என் தாய்மண்ணில் மட்டும் இன்றி உலகமெங்கும் தலைவிரிகோலமாக உள்ளது. இவற்றிற்கு ஆதாரங்களை நான் குடுக்க தேவை இல்லை, காரணம் அன்றாட பத்தரிக்கைகள், செய்திகள் வழியாக நிறைய செவிமடுக்கிறோம். இதுமற்றும் இன்றி பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களும் அதிக நேரத்தை இந்த தளத்திலே செலவிடுகின்றனர். மேலும் சிலர் இதன் மூலமாக பலவிதமான பிரச்சனைகள், வீண் வம்புகளை வளர்த்துகொள்கின்றனர்.
இப்படி தீய சீர்கேடுகளை வளர்த்து கொண்டிருக்கும் இந்த இணையதளம் உலகரீதியாகவும் தொழில்ரீதீயாகவும் அதீத நன்மைகளை குவித்துகொண்டிருக்கிறது. இவ்வளவு தீமைகளின் நடுவில் நன்மை மலர்வது அரிது. அந்த அரிதான செயலுடன் இயங்கும் தளமாக விளங்குகிறது இந்த பேஸ்புக் இணையத்தளம். உலக அரங்கில் விளமபர ரீதியாக முதன்மை வகிக்கிறது இந்த தளம். தற்போதெல்லாம் கைதொலைபேசி எண்களை கேட்கின்றமோ இல்லையோ பேஸ்புக்கின் இணையதள முகவரியைதான் கேட்கின்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
இவ்வாறு நன்மைகளையும் தீமைகளையும் குவிக்கின்ற இந்த பேஸ்புக் எனும் இணையதளம் நமக்கு நண்பனாக செயல்பட வேண்டுமா அல்லது நம்மை அழிக்கும் சக்தியாக செயல்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் கடமை நம்மிடம்தான் உள்ளது. நல்ல காரியங்களுக்கு மற்றும் அளவோடு உபயோகித்தால் இந்த தளம் நமக்கு நண்பன்...அளவுக்கு மீறினால் நஞ்சு என்பதை போலே, அளவு கடந்து போகும் பொழுது இந்த தளமே நம்மை அழிக்கும் சக்தியாக உருவெடுக்கிறது. ஆகவே தீர்மானம் நமது கையில்தான் உள்ளது...இனியாவது இந்த தளத்தின் மூலம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமுடன் இருக்க வேண்டும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
பதிப்புரிமை : சுரேஷ் காளியண்ணன்
0 Responses to 'பேஸ்புக் - இணையதள நண்பனா ? வாழ்வின் எதிரியா ?'
Post a Comment